tamilnadu

img

உலகப் பொருளாதாரத்தை பின்னுக்கு இழுத்த இந்தியாவின் மந்த நிலை

ஐஎம்எப் தலைமை பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் மதிப்பீடு

புதுதில்லி, ஜன.21- இந்தியாவின் பொருளாதார மந்தமானது, உலகப் பொருளாதார பின்னடைவுக்கும் ஒரு காரணமாக அமைந்திருப்பதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளா தார வல்லுநர் கீதா கோபிநாத் தெரிவித்துள் ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் 50-ஆவது உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பொருளா தார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஐஎம்எப் வெளி யிட்டது. அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) விகிதத்தை- தனது முந்தைய மதிப்பீடான 6.1 சதவிகிதம் என்ற நிலையிலி ருந்து, 4.8 சதவிகிதமாக மாற்றியமைத்தது. அத்துடன், உலகளாவிய வளர்ச்சி கணிப்பு களையும் முந்தைய 3.4 சதவிகிதம் என்ற மதிப் பீட்டிலிருந்து 3.3 சதவிகிதமாக குறைத்தது.

நடப்பு நிதியாண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.9 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இது ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்ததை விட குறைவானதாகும். இதனிடையே, சர்வதேச நாணய நிதி யத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், ஊடகங்களுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  அதில், “நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் 2019-20 நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பலவீனமாக இருந்தது. நிதித் துறை மிகமோசமான பின்னடைவைச் சந்தித் துள்ளது. கடன் வழங்கும் பணிகள் மிகவும் குறைந்துள்ளன.  கிராமப்புற மக்களின் வருவாயில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லை. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் சிக்கலில் இருக்கின்றன. இவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரியக் கார ணமாகவும் அமைந்துள்ளன. இவற்றையெல் லாம் கருத்தில் கொண்டுதான் பொருளாதார வளர்ச்சியை 4.8 சதவிகிதமாக குறைத்து மதிப் பிட்டு உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.  மேலும், “ஒட்டுமொத்தமாக உலக பொரு ளாதாரம் பின்னடைவைச் சந்திப்பதற்கும் இந்தியா ஒரு முக்கியமான காரணம்” என்று கூறியுள்ள கீதா கோபிநாத், “உலக பொருளா தார மந்தநிலையில், 80 சதவிகிதம் இந்தியா வின் தாக்கத்தால்தான் நிகழ்ந்திருக்கக் கூடும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இது மோடி அரசுக்கு புதிய நெருக்கடியாக மாறியுள்ளது.  

இந்நிலையில், மத்திய முன்னாள் நிதிய மைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஐஎம்எப் அறிக்கை யைக் குறிப்பிட்டு “பொருளாதார வளர்ச்சி 4.8 சதவிகிதத்திற்கு கீழே போனாலும் ஆச்சரி யமில்லை” என்று பதிவிட்டுள்ளார். “பண மதிப்பு நீக்கத்தை ‘மோசமான நட வடிக்கை’ என்று முதன்முதலாக விமர்சித்தவர் கீதா கோபிநாத். இப்போது இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சி குறித்த கணிப்பையும் அவர் குறைத்துள்ளார். இதனால், கீதா கோபி நாத்தையும், ஐஎம்எப் அமைப்பையும் தாக்கு வதற்கு நமது மத்திய அமைச்சர்கள் தயாரா வார்கள் என்று எதிர்பார்க்கலாம்” என்றும் சிதம் பரம் கிண்டலடித்துள்ளார். 

;